*கள்ளக்காதலால் ஆட்டோ டிரைவர் கழுத்தை நெரித்துக் கொலை.!!*
*தடையாக இருந்த கணவனை மனைவியே கொலை செய்தது விசாரணையில் அம்பலம்..!!*
*கள்ளக் காதலுக்கு உதவிய கள்ளக்காதலனின் மனைவியும் கைது..*
திருவண்ணாமலை மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டு சென்னை கோயம்பேடு நெற்குன்றம் சக்தி நகர் 24வது தெருவில் வசித்து வருபவர் நாகராஜ். இவருக்கு கடந்த 7 வருடங்களுக்கு முன்பு காயத்ரி என்னும் பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். காயத்ரி வானகரம் மீன் மார்கெட்டில் மீன் சுத்தம் செய்யும் பணி செய்து வந்தார். நாகராஜ் காயத்ரி தம்பதியினருக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 21-ஆம் தேதி நாகராஜ் மர்மமான முறையில் வாய் மற்றும் மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் பிணமாக வீட்டில் கிடந்துள்ளார்.
இதுகுறித்து கோயம்பேடு காவல் துறையினர் முதலில் சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்தனர். மேலும் உயிரிழந்த நாகராஜின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து நாகராஜின் மனைவி காயத்ரியின் விசாரணை மேற்கொண்ட பொழுது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
நாகராஜின் மனைவி காயத்ரி அவரது நண்பர் மகேந்திரன் என்பவர் உடன் ஏற்பட்ட கள்ளக்காதலின் விளைவாகவே தடையாக இருந்த நாகராஜ் கொலை செய்யப்பட்டது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும் அவருடன் தொடர் நடத்தும் நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் அதிர்ச்சியாக மகேந்திரனின் மனைவி பானுவும் இக்கொலையில் உடைந்த என்பதும் தெரியவந்தது.
நாகராஜ் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருபவர். இவருக்கு அதே பகுதி 19 வது தெருவை சேர்ந்த மகேந்திரனின் என்பருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இதன் காரணமாக மகேந்திரனின் மனைவி பானுவும் காயத்ரியும் நெருங்கிய தொழியாக இருந்துள்ளனர். நாகராஜ் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்ததாக கூறப்படுகிறது.
இருவரும் நண்பர்கள் என்பதால் மகேந்திரன் அடிக்கடி நாகராஜ் வீட்டிற்கு சென்றதாகவும் தெரிகிறது. நாளடைவில் காயத்ரியும் மகேந்திரனும் நெருங்கி பழக ஆரம்பித்துள்ளனர் . இது குறித்து அறிந்த நாகராஜ் பலமுறை காயத்ரியை கண்டித்ததாக தெரிகிறது. இதனால் அடிக்கடி நாகராஜ் காயத்ரி தம்பதிகள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்துக்கு மேல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாகராஜ் காயத்ரி இடையே சண்டை ஏற்பட்டு காயத்ரி கோபித்துக் கொண்டு தனியாக சென்று வாழ்ந்து வந்தார். பின்னர் சில தினங்களுக்கு முன்பு தான் காயத்ரி நாகராஜுடன் வந்து சேர்ந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நாகராஜ் தனது சக நண்பர்களிடம் மகேந்திரனை நம்பி விட்டில் சேர்த்ததற்காக மகேந்திரன் என் வாழ்க்கையை நாசம் செய்து விட்டான் அவனைக் கொலை செய்யாமல் விடமாட்டேன் என்று போதையில் கூறியுள்ளார்.
இதைக் கேட்ட மகேந்திரனின் மனைவி பானு காயத்ரியிடம் தெரிவித்துள்ளார். காயத்ரி நாகராஜ் எப்பொழுதும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து என்னை அடித்து துன்புறுத்துவதாக பானுவிடம் தெரிவித்துள்ளார். பின்னர் மூவரும் ஒன்று சேர்ந்து நாகராஜை கொலை செய்ய திட்டம் திட்டம் தீட்டி உள்ளனர்.
அதேபோல் கடந்த 21ஆம் தேதி காயத்ரி வீட்டிற்கு நள்ளிரவில் பானு சென்றுள்ளார். அப்பொழுது வீட்டில் நாகராஜ் குடிபோதையில் கட்டில் மேலே கொண்டிருந்தார் இதனை பயன்படுத்திக் கொண்டு காயத்ரி மற்றும் பானு இருவரும் தலையணையால் நாகராஜ் முகத்தில் அழுத்தி மூச்சு திணற செய்தோம் துப்பட்டாவால் நாகராஜன் கழுத்தை நெரித்தும் கொலை செய்துள்ளனர்.
ஆனால் ஒன்றும் தெரியாதது போல் காயத்ரி தனது தம்பி வினோத்திற்கு போன் செய்தேன் நேற்று இரவு நாகராஜ் தனக்கும் தகராறு ஏற்பட்டதாகவும் இரவு நாகராஜ் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் மிரட்டியதாக காயத்ரியின் கூறியுள்ளார்.
இதனை நம்பி சென்று வினோத் நாகராஜன் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது தான் நாகராஜ் வாய் மற்றும் மூக்கில் ரத்தம் வடிந்த நிலையில் இறந்து கிடந்துள்ளார்.
இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த கோயம்பேடு இன்ஸ்பெக்டர் மாதேஸ்வரன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். பின்னர் இது குறித்து
போலீசார் தொடர்ந்த விசாரணையில் நாகராஜ் கொலை செய்ய அவரது நண்பன் மகேந்திரன் மற்றும் மகேந்திரனின் மனைவி பானு ஏதும் அம்பலமானது.
இதனைத் தொடர்ந்து கோயம்பேடு போலீசார் காயத்ரி மற்றும் மகேந்திரனின் மனைவி பானுவையும் கைது செய்து சிறையில் அடைத்தனர் மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய மகேந்திரனை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் நேற்று காலை மகேந்திரன் கோயம்பேடு காவல் நிலையத்தில் சரணடைந்ததாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக மகேந்திரனும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலை நாடுகளின் நாகரிகம் மோகத்தாலும் கலாச்சார சீர்கேடுகள் இவ்வகை செயல்கள் தொடர்ந்து சமூகத்தில் பெருகிக் கொண்டே வருகின்றன இதற்கு உதாரணமாக சமயங்களுக்கும் முன்பு சென்னை நீதிமன்றம் திருமணமான ஆணும் திருமணம் ஆன பின்னும் பழகுவதில் தவறில்லை என தெரிவித்ததும் ஒரு காரணம் என்று சமூக ஆர்வலர் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக சமுதாயத்தில் பல சீர்கேடு நிகழ்வுகள் தொடர்ந்து அரங்கேறி வருவதாக வும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment